Saturday, June 16, 2012

எண்ணெய் குளியலும் உடல் நலமும்...

இன்றைய இளைய தலைமுறையினர் பலர் எண்ணெய் தேய்த்து குளிப்பார்களா என்பது சந்தேகம் தான். நம் முன்னோர்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிமுறைகளை சொல்லி உள்ளனர். அதில் முக்கியமான ஒன்று எண்ணெய் குளியல். இன்று நம்ம ஊரைப்பொறுத்த வரை எண்ணெய்க் குளியல் அதிகம் நடக்கும் இடம் குற்றாலம் மற்றும் ஒகேனக்கல் அங்கு சென்றால் மட்டுமே நமக்கு எண்ணெய் குளியல் ஞாபகம் வருகிறது. ஒரு 15 வருடங்களுக்கு முன் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது நமது கிராமங்களில் சனிக்கிழமை அன்று எண்ணெய் குளியல் நிறைய வீடுகளில் நடக்கும் இன்று அது அரிதாகி விட்டது. தீபாவளி அன்று தான் நம் வீட்டில் எண்ணெய் தேய்த்துக் குளியல் நடக்கும் ஆனால் அதன் முழுப்பயனும் அன்று ஒரு நாள் மட்டும் குளித்தால் நடக்குமா? நிச்சயம் நன்மை இருக்காது.

எப்படிக் குளிப்பது

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கு என்று நாட்கள் உள்ளன. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் செய்ய வேண்டும்.
எண்ணெய்க் குளியலுக்கு ஏற்ற எண்ணெய் நல்லெண்ணெய் தான். அது கொஞ்சம் சூடு படுத்தி முதலில் உச்சந்தலையில் சூடு பறக்க தேய்க்க வேண்டும். பின் உடலின் ஒவ்வொரு பாகங்களிலும் மெதுவாக தேய்க்க வேண்டும் நன்கு தேய்த்த பின் கடைசியாக இரண்டு கண்களிலும் இரணஇடு சொட்டு எண்ணெய் விடவேண்டும். பின் சூரிய ஒளியில் ஒரு 20 நிமிடம் உடல் காய நிற்கவேண்டும். பின் வெந்நீரில் சீகக்காய் போட்டு எண்ணெய் போக குளிக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு

ஒரு வயது‌க்கு‌ள் இரு‌க்கு‌ம் குழ‌ந்தைகளாக இரு‌ந்தா‌ல் அவ‌ர்களு‌க்கான எ‌ண்ணெயை (பே‌பி ஆ‌யி‌ல்) வார‌த்‌தி‌ல் ஒரு நாளாவது உட‌ல் முழு‌க்க‌த் தட‌வி‌வி‌ட்டு வெதுவெது‌ப்பான ‌நீ‌ரி‌ல் கு‌ளி‌ப்பா‌ட்டு‌ங்க‌ள்.

ஒரு வயது‌க்கு மே‌லிரு‌க்கு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு ந‌ல்லெ‌ண்ணை வா‌ங்‌கி வ‌‌ந்து, ச‌னி‌க் ‌கிழமைக‌ளி‌ல் உட‌ல் முழுவது‌ம் தே‌ய்‌த்து ‌சி‌றிது நேர‌ம் ஊற‌வி‌ட்டு ‌பி‌ன்ன‌ர் கு‌ளி‌க்க வை‌க்கலா‌ம்.

முத‌‌ல் இர‌ண்டு மூ‌ன்று வார‌ங்களு‌க்கு ந‌ல்லெ‌ண்ணை தே‌ய்‌த்தது‌ம் கு‌ளி‌க்க வை‌த்து ‌விடு‌ங்க‌ள். பு‌திது எ‌ன்பதா‌ல் உடலு‌க்கு ஏ‌ற்று‌க் கொ‌ள்ள ‌சில நா‌‌‌ள் ‌பிடி‌க்கு‌ம்.

ந‌ல்லெ‌ண்ணைய புரு‌வ‌த்‌தி‌ல் தடவ ம‌ற‌க்க வே‌ண்டா‌ம். 4வது வார‌த்‌தி‌ல் இரு‌ந்து 10 ‌நி‌மிட‌ம் முத‌ல் ஊற ‌வி‌ட்டு‌க்‌ கு‌ளி‌ப்பா‌ட்டு‌ங்க‌ள்
கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.

நன்மைகள் :

உடல் சூட்டைத் தணிக்கும்
உடல் புத்துணர்ச்சி பெறும்
உடலில் உள்ள நரம்புகள் செயல்பாடு அதிகரிக்கும்
திருமணம் ஆன தம்பதிகளுக்கு இல்லற இன்பம் அதிகரிக்கும் (இதற்காகத்தான் திருமணம் ஆன இரண்டு நாட்கள் கழித்து எண்ணெய் தேய்த்து விருந்து வைக்கின்றனர்)
சளி தலைவலி தொல்லையில் இருந்து விடுபடலாம்
ஆரோக்கியமான தூக்கத்திற்கு வழி வகுக்கும்

நோயற்ற வாழ்விற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் எண்ணெய் குளியல் அவசியம் என்பதே என் கருத்து.

2 comments:

  1. most important thing it cools intestines and improves digestion

    ReplyDelete
  2. Yes, you are correct. Thanks for viewing my posts :)

    ReplyDelete