Wednesday, June 13, 2012

இளநீர்

இளநீர் மனித உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானதொரு இயற்கை உணவாகும். கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கத்தைத் தவிர்க்க இது மிகவும் விரும்பி அருந்தப்படுகிறது. இளம் தேங்காயில் உள்ள சுத்தமான நீர் இளநீர். இது சிறிது பால் கலந்த நீர்போன்ற வெண்மை நிறமுடையது.

தூய கலப்படமற்ற சத்துகள் நிறைந்த இளநீர் தாகத்தைத் தீர்க்கும். இளநீர் இளமையைக் காக்கும் அரிய பானமாகும். உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால்தான் இளமையும் பொலிவும் உடலிலும் உள்ளத்திலும் பிறக்கும். இளநீர் அருந்தியதும் நமக்கு ஒருவித உற்சாகம் பிறக்கிறது. காரணம் 100 கிராம் இளநீரில் 312 மில்லிகிராம் பொட்டாசியமும் 30 மில்லி கிராம் மக்னீசியமும் உள்ளன. இந்த இரு தாது உப்புகளும் உடனடியாக எலும்புகளுக்கும் தசை களுக்கும் ஒருவிதப் புத்துணர்ச்சியையும் வலுவையும் ஊட்டி விடு கின்றன. இதனால்தான் இளநீர் அருந்தியதும் நமக்குப் புதுத்தெம்பு கிடைக்கிறது. உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாதுஉப்புக்களைச்சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.

இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும் இரத்த நாளங்களில் சூடு அண்டாதிருக்க உறுதுணையாகிறது. மூல நோயாளிகள், நாட்பட்ட சீதபேதி, ,ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கின்றது. இளநீர் அதிக அளவில் பொள்ளாச்சி பகுதியில் இருந்தும் கன்னியாகுமரி, நாகர்கோயில் போன்ற இடங்களில் இருந்தும் சென்னைக்கு தருவிக்கப்பட்டு விற்கப்படுகிறது

No comments:

Post a Comment